சீனாவின் அதிபராக சி ஜின்பிங் இரண்டாவது முறையாகத் உறுதிமொழி கூறிப் பதவியேற்பு!
தலா ஐந்து ஆண்டுகள் வீதம் சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதன் பிறகு அதிபர் பதவியில் இருந்து அவர் விலகிவிட வேண்டும்.
ஆனால் கடந்த 2013மார்ச் மாதத்தில் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி ஜின்பிங்கின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அவரையே மீண்டும் அதிபராக சீன நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.
அத்துடன் இந்த முறை அதிபராக பதவி ஏற்றுள்ள சி ஜிங்பிங், தனது வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் நீடிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் சி ஜிங்பிங் தனது வாழ் நாள் முழுவதுமோ, அல்லது தான் விரும்பும் வரையிலோ அதிபர் பதவியில் நீடிக்க முடீயும். ஊழல் ஒழிப்புக்குப் பெயர்பெற்ற வாங் கிசான் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி கூறிப் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.