அழகான புதிய மணமகளுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி – ராதிகா!

Default Image

காஜலுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அழகான புதிய மணமகளான காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என ராதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை பிரபல தமிழ் திரையுலக நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து வெளியூர்களுக்கு எல்லாம் சென்று ஹனிமூன் கொண்டாடிவிட்டு மும்பை திரும்பியுள்ள காஜல் அகர்வால், ஹைதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவி அவர்களின் ஆச்சாரியா படத்தில் கலந்துகொண்டு நடித்து இருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது இந்தியன் 2 மற்றும் கைசினாமிகா ஆகிய படங்களில் நடித்து வரக்கூடிய காஜல் அகர்வால் மீண்டும் குலேபகாவலி எனும் பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க கூடிய புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவருடன் ராதிகா சரத்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, காஜல் அகர்வால் போன்ற அழகான புதிய மணமகளுடன் பணியாற்றுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்