Playboy இதழ் மாடல் அழகி பகீர் தகவல்!டிரம்ப் பொழுதைக் கழித்த பின்னர் பணம் தர முயற்சி ..!தான் அப்படிப் பட்ட பெண் அல்ல…!
பிளேபாய் பத்திரிகையின் முன்னாள் மாடலான மக்டோகள் (McDougal) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தான் காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
மக்டோகள் (McDougal)- அமெரிக்காவில் உள்ள சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிளே பாய் பத்திரிகையின் சார்பில் நடத்தப்பட்ட தொலைக்காட்சித் தொடரின் போது டிரம்ப்பை முதன்முறையாக தான் சந்தித்ததாகவும், இதன் பின்னர் 2006ம் ஆண்டு தொடங்கி 10 மாதங்கள் வரையிலும் தங்கள் இருவருக்கும் இடையே உறவு நீடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முதன்முறையாக டிரம்ப்புடன் பொழுதைக் கழித்த பின்னர் அவர் தனக்கு பணம் தர முற்பட்டதாகவும் ஆனால் தான் அப்படிப் பட்ட பெண் அல்ல என கூறி பணத்தைப் பெற மறுத்துவிட்டதாகவும் மக்டோகள் (McDougal) தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.