அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 5,874,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 180,604 -பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவில் சக்திவாய்ந்த ஆன்டிபாடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனாவை விரைவாக எதிர்த்துப் போராடி, கொரோனா பாதிக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது.
பிளாஸ்மா சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் செயல்திறன் குறித்து இன்னும் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலர் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என குறியுள்ளனர்.
டிரம்ப் அவசரகால அங்கீகாரத்தை அறிவிப்பார் என முந்தைய கடந்த அமெரிக்க செய்தி நிறுவங்களில் செய்தி வெளியானது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, ட்ரம்ப் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, ஜனாதிபதி “ஒரு பெரிய சிகிச்சை முன்னேற்றத்தை” அறிவிப்பார் என்றார்.
இந்நிலையில், டிரம்ப் ஒப்புதலை அறிவிப்பதாக அறிவித்த வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்காவில் 70,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…