சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விமானத்தை ஓடுதளத்தில் ஊழியர்கள் தள்ளிச் சென்ற காட்சிகள் !
பயணிகள் விமானத்தை இந்தோனியாவில் ஓடுதளத்தில் ஊழியர்கள் தள்ளிச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கருடா இந்தோனேசியா நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம் தம்பலோகா ஏர்ப்போட்டில் ((Tambolaka )) தரையிறங்கியது.
பின்னர் 20-க்கும் அதிகமான விமான நிலைய ஊழியர்கள், அந்த விமானத்தின் றெக்கைகளைப் பிடித்து தள்ளி, நகர்த்தினர். 37 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிஆர்ஜே 1000 ரக ((CRJ1000)) விமானத்தை, பிற வாகனங்களைப் போல நகர்த்திய நகைப்பூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விமானம் தவறான திசையில் நிறுத்தப்பட்டதாகவும், இதை சரிசெய்ய உரிய சாதனங்கள் இல்லாததாலும், ஊழியர்களைக் கொண்டு விமானத்தை நகர்த்தியதாக விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.