அமெரிக்காவில் பீச் கிராஃப்ட் சி23 எனும் விமானம் விபத்துக்குள்ளாக்கியத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மேற்கு வெர்ஜினியா பகுதியில் நேற்று காலை பீச் கிராஃப்ட் சி23 எனும் சிறிய வகை விமானம் பாயெட் எனும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் சார்லஸ்டனுக்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவில் உள்ள நியூ ரிவர் கோர்ஜிலிருந்து சில மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது.
எனவே, இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்துக்குள் இருந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நிக் பிளெட்சர், 36 வயதுடைய மைக்கேல் டாப்ஹவுஸ் மற்றும் 39 வயதுடைய வெஸ்லி பார்லி ஆகியோர் தான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…