ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஜப்பானிய ஊடகமான NHK-ல் விபத்துக்கான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதையும் விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளிவருவதைக் காட்டுகிறது.
மேலும், அந்த விமானம் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து 2ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு, ஹனேடா விமான நிலையத்தில் மாலை 5:40 மணிக்கு தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விபத்துக்கான காரணாம் மற்றும் யாரேனும் உயிரிழந்தனரா? காயங்கள் ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்த கூடுதல் தகவலுக்காக காத்திருக்கவும்….
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…