ஜப்பானில் அடுத்த துயரம்!! விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீ விபத்து…

Tokyo airport

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அந்த  வகையில், ஜப்பானிய ஊடகமான NHK-ல் விபத்துக்கான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதையும்  விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளிவருவதைக் காட்டுகிறது.

மேலும், அந்த விமானம் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து 2ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு, ஹனேடா விமான நிலையத்தில் மாலை 5:40 மணிக்கு தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விபத்துக்கான காரணாம் மற்றும் யாரேனும் உயிரிழந்தனரா? காயங்கள் ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ  தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இது குறித்த கூடுதல் தகவலுக்காக காத்திருக்கவும்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்