40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து ஸ்கைவர்ட் விமானம் புறப்பட்டு இன்று காலை வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்றது.
இந்நிலையில், சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் உள்ள எல்வாக்கில் உள்ள புராஹேச் இராணுவ முகாமில் ஸ்கைவர்ட் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இயந்திர கோளாறு காரணமாக நடத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு விமான வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கெடோ பகுதி சோமாலிய தேசிய இராணுவத்தின் (எஸ்.என்.ஏ) கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத குழு எப்போதாவது இப்பகுதியில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்துகிறது. நைரோபியில் உள்ள ஸ்கைவர்ட் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற்ற பின்னர் ஒரு அறிக்கையை வெளியிடுவதாக கூறினர்.
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…