அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணத்தடையை நீக்க திட்டம்…!
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகளுக்கான பயணத்தடையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் பிற நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தால் மட்டுமே சில நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் அனுமதித்து வருகிறது.
அதிலும் சில நாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளாக இருந்தாலும், பத்துநாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அந்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதே முறை தான் அமெரிக்காவிலும் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது வரும் நவம்பர் மாதத்திலிருந்து அனைத்து சுற்றுலா பயணிகளும் தடுப்பூசி முழுமையாக எடுத்துக் கொண்டு இருந்தால் பயண கட்டுப்பாடின்றி அமெரிக்காவுக்குள் நுழையலாம் என கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்கா செல்ல கூடிய சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் மூன்று நாட்களுக்கு முன்பதாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் போதும் என கூறப்படுகிறது. இந்த புதிய திட்டம் வருகிற நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.