பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகவதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகாகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் கடந்த ஆண்டே இந்த திரைப்படம் திரயரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகமாக உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில், ரோபோ சங்கர், பாலா சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…