வீட்டில் இந்த திசையில் கடிகாரம் உள்ளதா? உடனடியாக மாற்றிவிடுங்கள்..!
இன்று வீட்டில் மாட்டி வைக்க கூடிய கடிகாரத்தை எந்த திசையில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடிகாரத்தை சரியான திசையில் வைப்பது எப்படி நல்ல பலனைத் தருகிறதோ, அதே போல வீட்டில் அல்லது அலுவலகத்தில் தவறான திசையில் கடிகாரத்தை வைத்தால், அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களைத் தரும். எனவே, சரியான திசையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
கடிகாரத்தை வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் வைக்கக்கூடாது, ஏனெனில் தெற்கு திசை யமனின் திசையாக கருதப்படுகிறது மற்றும் இந்து மத நூல்களில், யமனை மரணத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம், வியாபாரத்தில் தடைகள் வர ஆரம்பித்து, வளர்ச்சியின் வேகம் குறைந்து விடும். இதனுடன், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். வீட்டின் தெற்கு திசை மற்றும் வீட்டின் பிரதான கதவில் கடிகாரத்தை வைக்க வேண்டாம்.