எரிமலையின் தீப்பிழம்பில் தயாராகும் பீட்சா…! பீட்சாவை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…!
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலையில், பீட்சா தயாரிக்கும் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா.
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலை அவ்வப்போது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. இதனையடுத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மலையின் உச்சிப் பகுதியிலிருந்து அடிவாரத்துக்கு வழிந்து வருகின்ற தீப்பிழம்புகளில் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா சமையல் அறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்தி வருகிறார்.
100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தங்குவதற்கு ஏற்ற பீட்சா தயாரிக்கும் பாத்திரத்தை உருவாக்கி, அவர் பீட்சா தயாரித்து வருகிறார் இந்த பீட்சாவுக்கு pacaya பீட்சா என பெயர் வைத்துள்ளார். இவர் தயாரிக்கும் பீட்சாவை அப்பகுதியில் வாழும் மக்கள் வாங்கி ருசிப்பதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இந்த பீட்சாவில் டொமேட்டோ சாஸ், சீஸ் மற்றும் இறைச்சியை கொண்டு தயாரிக்கிறார் .
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், எரிமலையிலிருந்து வழிந்தோடும் தீப்பிழம்புகளில் பீட்சாவை தயாரித்து வருகிறேன். இதை தயாரிக்கும் போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டுதான் தயாரிக்கிறேன். இதன் மணமும் ருசியும் அருமை என எங்களது பீட்சாவை சாப்பிட்டவர்கள் சொல்லி வருகின்றன என தெரிவித்துள்ளார்.