பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படும் ரசாயனம் உள்ளதா…!

Published by
Rebekal

பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய ஒன்று தான்.

ஆனால், மீண்டும் அதே தவறை தான் அனைவரும் செய்வார்கள். ஆனால், இந்த துரித உணவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவை  நீங்கள் அறிந்து கொண்டால் இனி அவற்றை வாங்கி உண்ண பலமுறை யோசிப்பீர்கள். தற்பொழுது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்,  பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் துரித உணவுகள் குறித்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஆகிய மெக்டொனால்ட்ஸ் பர்கர், பீட்சா ஹட், டாமினோஸ், டகோ பெல் மற்றும் சிபொட்டில் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் உள்ள சீஸ் பீட்ஸா மற்றும் சிக்கன் போன்ற மாமிச உணவுகளில் அதிக அளவிலான பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ரசாயனம் பெரும்பாலும் அழகு சாதன பொருட்கள், சோப்பு, கையுறைகள், கம்பிக் கவர்கள் ஆகியவை தயாரிப்பில் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுமாம். இந்த ரசாயனம் பிளாஸ்டிக்கை மிருதுவாக மாற்றுவதற்கும், வளைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாம்.  ஆராய்ச்சியாளர்கள் சிக்கன், பீட்சா போன்ற 64 உணவு மாதிரிகளை ஆராய்ச்சி செய்ததில் 80 சதவீத உணவுகளில் இந்த பித்தலேட்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்தப் பித்தலேட்டுகள் காரணமாக பெண்கள் கருவுறுதல் 70% பாதிக்கப்படும் என கூறியுள்ளனர். மனித உடலிலுள்ள எண்டோகிரைனை  சீர்குலைக்கும் இந்த ரசாயனம் ஆஸ்துமா மற்றும் மூளை குறைபாடு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், நாம் உட்கொள்ளக் கூடிய துரித உணவுகளில் இந்த பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ரசாயனம் கண்டறியப்பட்ட உணவுகள் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட துரித உணவுகளில் இருந்து மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது என்றாலும், பெரும்பாலும் துரித உணவகங்கள் அவற்றின் உணவு செயல்முறைகளை ஒரே முறையில் கையாளக் கூடியதாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் அனைத்து பகுதியில் உள்ள துரித உணவுகளிலும் இந்தப் ரசாயனம் கலக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துரித உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நமது உடலுக்குள் செல்லக்கூடிய பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் உடலில் இருந்து நீண்ட நாட்கள் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Recent Posts

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

3 minutes ago

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

25 minutes ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

13 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

14 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

15 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

15 hours ago