பூஜையுடன் தொடங்கப்பட்ட பிசாசு 2 படப்பிடிப்பு..!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திகே ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.
இந்தநிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தின் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் இதனை பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025