கொரோனாவுக்கான அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை தொடர்ந்து, தற்பொழுது கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதுவும் கொரோனா அறிகுறி என நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 87,57,748 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,62,519 பேர் உயிரிழந்த நிலையில், 46,25,445 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஆகும்.
இதுமட்டுமின்றி, தற்பொழுது நோய் அறிகுறிகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அந்த வகையில், கண்கள் “இளஞ்சிவப்பு” (Pink) நிறமாக மாறினால், அது கொரோனா அறிகுறிகளில் ஒன்று என நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், கொரோனா பாதித்தோரில் 10-15 சதவீத மக்களுக்கு கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான கார்லோஸ் சோலார்ட்டே கூறினார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…