சைனஸ், தொண்டைப்புண்களைக் குணமாக்கும் அன்னாசிப்பழம்

Default Image

பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது. ஆனால் இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. ஏனென்றால் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி :-
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.

செரிமானம் :-
செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.

சளி மற்றும் இருமல் :-
அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். அதிலும் சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகளை வலிமையடையும் :-
அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது

ஆரோக்கியமான ஈறுகள் :-
அன்னாசிப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மாகுலர் திசு செயலிழப்பு :-
இன்றைய கால தலைமுறையினருக்கு விரைவிலேயே பார்வை கோளாறு ஏற்படுகிறது. அன்னாசியில் உள்ள பீட்டா-கரோட்டீன் பார்வையை மேம்படுத்தி, மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைத் தடுத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே முடிந்தால், தினமும் சிறிது அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

ஆர்த்ரிடிஸ் :-
அன்னாசிப்பழத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், இதனை ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் உட்கொண்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, மூட்டுகள் வலிமையடையும்.

சைனஸ், தொண்டைப்புண் :-
சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது. இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோமெலைன் தான் காரணம்.

புற்றுநோய் எதிர்ப்பு பொருள் :-
அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.

பெருந்தமனி தடிப்பு :-
அன்னாசிப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களால் உண்டாகும் பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.

இதய ஆரோக்கியம் :-
அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அதனால் இதய நோய் வருவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

மூச்சுக்குழாய் அழற்சி :-
அன்னாசிப் பழத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கம், காயம் போன்றவை குறைந்துவிடும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் :-
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அன்னாசியை டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியத்தால், இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

வயிற்றுப்புழுக்கள் :-
அன்னாசிப்பழத்தில் செரிமான நொதியான ப்ரோமெலைன் உள்ளது. எனவே அன்னாசியை டயட்டில் சேர்க்கும் போது, அது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்