விமான கழிவறையில் கேமரா வைத்து லைவாக பார்த்த விமானி..!
அமெரிக்காவின் சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிட்ஸ்பெர்கில் இருந்து பொனிக்ஸ் நோக்கி புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு விமானிகளில் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
ஒரு விமானி இல்லாத நிலையில், உதவிக்காக விமானத்தில் பணிபுரிந்த ரெனி என்ற பணிப்பெண், காக்பிட்க்குள் சென்றார். அப்பொழுது கட்டுப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு விமானி கழிப்பறையில் நடக்கும் காட்சிகளை லைவாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த பெண்ணை பார்த்து பதறிய விமானி, அந்தப் பெண்ணிடம் இது அனைத்து 737-800 விமானங்களிலும் செய்யப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடு என்று கூறினார். அதனை சிறிதும் நம்பாத பணிப்பெண், அதனை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார்.
இந்த படத்தை ஆதாரமாகக் கொண்டு, சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அவர்கள் இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என எச்சரித்து தவறை அப்படியே மறைக்க முயன்றதாக ரெனி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விமானிகள் மீது வழக்கு கொடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை நீட்டித்து வருகிறது விசாரணையின்போது அப்படி என்ற தவறும் நடக்கவில்லை என்று விமான நிறுவன தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த புகார் காரணமாக, அந்தப் பணிப்பெண் தனது வேலையை இழந்துள்ளார்.