புனித பயணம் மேற்கொள்பவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை.!
- இஸ்லாமிய புனிதத்தளங்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் தற்போது வரை COVID-19 வைரஸ் யாருக்கும் பரவில்லை.
சீனாவில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய COVID-19 வைரஸ் தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரேன், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆனால் இஸ்லாமிய புனிதத்தளங்கள் அதிகம் உள்ள சவுதி அரேபியாவில் தற்போது வரை COVID-19 வைரஸ் யாருக்கும் பரவில்லை.
இந்நிலையில், அண்டை நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக பிற நாடுகளில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மெக்கா, மெதினா உள்ளிட்ட இஸ்லாமிய புனிதத்தளங்கள் நிறைந்துள்ள சவுதி அரேபியாவுக்கு உலகில் அனைத்து பகுதிகளிலிருந்து ஹச் புனித பயணிகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.