விஷால் நடிக்கும் “சக்ரா” படத்திலுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடிக்கிறார். மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது.
இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அந்த ஸ்டில்ஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…