டான் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!
டான் படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள்.
இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் , பாலா, சிவகார்த்திகேயன், ஆகியோர் உள்ளனர்.
@Siva_Kartikeyan Anna ???????? colorful #Don Team’s ???????? pic.twitter.com/vHb8IYCSxs
— Lovely Akilan (@lovely_akilan) August 8, 2021