சர்தார் படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்.! இணையத்தில் வைரல்

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விருமன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, ராஜீஷா விஜயன் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி 2 வேடத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார்த்தி அடுத்த படத்திற்கு செல்லவுள்ளார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் அதன்படி, ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.