அந்தகன் டப்பிங் பணியில் பிரியா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Published by
பால முருகன்

பிரியா ஆனந்த் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஹிந்தி திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கே‌எஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் இசையமைத்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. டப்பிங்கில் நடிகர் கார்த்திக், லீலா சம்சன், பூவையார், மனோ பாலா, நடிகர் பிரஷாந்த் உள்ளிடோர் கலந்துகொண்டு டப்பிங் பேசி முடித்தனர்.
இந்த நிலையில், இவர்களை தொடர்ந்து படத்தின் கதாநாயகியான பிரியா ஆனந்த் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Published by
பால முருகன்

Recent Posts

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

16 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

2 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

2 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

3 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

3 hours ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

17 hours ago