சீனாவில் காட்டுயானைகள் ஒன்றாக தூங்கும் வைரல் புகைப்படம்..!

Default Image
  • சீனாவில் நகர்ப்பகுதிக்குள் நுழைந்த 15 யானைகள் காட்டுப்பகுதியில் ஒன்றாக ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஹூனிங் நகருக்குள் திடீரென்று 15 காட்டுயானைகள் நுழைந்து அங்கு மக்கள் இருக்கும் பகுதிக்குள் சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டுயானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பாதை மாறி 480 கி.மீ நடந்து வந்துள்ளது. இதனால் தற்போது ஹூனிக் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அந்த காட்டுயானைகளை காட்டிற்குள் திருப்பும் முயற்ச்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

அதனால் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழையாத வண்ணம் போகும் பாதையில் வாகனங்களை நிறுத்தி வருகிறது. மேலும், அந்த யானைகளுக்கு அன்னாசி போன்ற பழங்களை உண்பதற்காக வழங்கி வருகிறது. இருந்தபோதிலும், யானைக்கூடங்கள் அங்கு அருகில் இருக்கும் கடைகளில் பழங்களை உண்பதும் அங்கு இருக்கும் இடங்களில் உல்லாசமாய் சுற்றித்திரிவதுமாக இருந்து வந்தது. இந்த யானைகளில் ஒன்று தற்போது அதன் குட்டியையும் ஈன்றுள்ளது.

அவ்வப்போது இதன் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த 16 யானைகளும் நகருக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உறங்கும் காட்சி வைரலாகி வருகிறது. இதில் இந்த யானைக்கூடங்கள் அனைத்தும் ஒன்றாக உறங்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசு ட்ரான் கேமரா மூலம் எடுத்துள்ளது. 480 கி.மீ வழிமாறி வந்த களைப்பால் இவை அனைத்தும் ஓய்வெடுக்கும் காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Maharashtra Election 2024 Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024