பலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!
இலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடப்பெறும். இதனையடுத்து, இந்த விழா ஆகஸ்ட் 5-ம் தேதி துவங்கி, நேற்று இரவு நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் 50 யானைகள் மற்றும், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 70 வயதுள்ள டிக்கிரி என்ற பெண் யானையும் கலந்து கொண்டுள்ளது. யானைகள் என்றாலே நமது மனதில் தோன்றுவது, அது ஒரு பெரிய, உடல் எடை அதிகமான மிருகம் என்று தான் தோன்றும். ஆனால், இந்த யானையோ, நடப்பதற்க்கே உடலில் பெலன் இல்லாமல், மெலிந்த நிலையில், எலும்பும் தோலுமாக உள்ளது.
இந்நிலையில், சேவ் எலிபெண்ட் என்ற அறக்கட்டளை இந்த யானையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த யானை குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, “டிக்கிரிக்கு உடல்நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று.
திருவிழா தொடங்கும் போது, அதாவது மாலை நேரங்களில் இந்த பேரணிக்கு செல்லும் டிக்கிரி, மீண்டும் நள்ளிரவில் தான் அதன் இருப்பிடத்திற்கு செல்கிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது.” தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.