ராகவா லாரன்ஸ் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக பணியாற்றி, அதன் பின்னர் தனது முயற்சியாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கிலும் கோடி கணக்கில் நிதியுதவி வழங்கிய ஒரே நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .
இவர் பெரும்பாலும் தனது குடும்பத்தில் அம்மாவின் புகைப்படத்தை தவிர மற்றவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது இல்லை. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அவரது மகளான ராகவா சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அவருக்கும் தனது அப்பாவை போன்று டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்பது ஆசையாம். இந்த நிலையில் தற்போது அவரது மகளுடன் இணைந்துள்ள ராகவா லாரன்ஸின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுவரை ராகவா லாரன்ஸின் மகளை பார்க்காத பலர் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…