வேதாளம் கெட்டப்பில் தல அஜித்… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்..!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காமல் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும் என்று காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தல 61 படத்திற்கான கெட்டப் இதுதான் என்று கூறிவருகிறார்கள்.
Thala Latest Picture In Rifle Club ????#Valimai #AjithKumar pic.twitter.com/nzm8cO89u3
— MALAYSIA THALA AJITH FAN CLUB ® Ⅱ (@ThalaArmyOnline) February 26, 2021