PHONEPE-ஐ தொடர்ந்து BOOK MY SHOW-வையும் வாங்கும் FLIPKART
ப்ளிப்கார்ட் நிறுவனம் ‘புக் மை ஷோ’ என்ற இணையதளடிக்கெட் முன்பதிவு செயலியின் பங்குகளை வாங்க திட்டமிட்டு தொடக்க நிலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்களது போன்பீ செயலியின் பரிவர்த்தனையையும் அதிகரிக்கச் செய்ய இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது , இந்த பேச்சுவார்த்தை தற்போது தொடக்க நிலையில் உள்ளது எனவும் . பிளிப்கார்ட் நிறுவனம் `புக் மை ஷோ’வின் குறைந்த அளவிலான பங்குகளை வாங்கவும் முயற்சி செய்கிறது என்று தெரியவந்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு இணையதளத்துடன் கைக்கோர்த்தால், தங்களது பண பரிமாற்ற செயலியான போன்பீ மூலம் `புக் மை ஷோ’ வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் உதவும் என பிளிப்கார்ட் நம்புகிறது. போன் பீ செயலியை பிளிப்கார்ட் 2015-ம் ஆண்டு கையகப்படுத்தியது. பேடிஎம் செயலிக்கு மாற்றாக போன்பீ பரிவர்த்தனையை அதிகரிக்கச் செய்ய பிளிப்கார்ட் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்து இரண்டு நிறுவனங்களும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் `புக் மை ஷோ`வுடன் கூட்டு சேர்கையில் பொழுதுபோக்கு சார்ந்த சேவைகளையும் மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தில் பொழுதுபோக்கு சேவைகளை ஒருங்கிணைத்து விரிவாக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக அமே சான் நிறுவனம் அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் நவ் என பொழுதுபோக்கு சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.
பேடிஎம் நிறுவனம் சமீபத்தில் பயணம் மற்றும் டீலிங் சார்ந்த லிட்டில் மற்றும் நியர் பை இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் வயா டாட் காம் நிறுவனத்துடனும் பேசி வருகிறது. சீனாவின் அலிபாபா நிறுவனம் தனது பேமண்ட் செயலியை மேம்படுத்த ஆன்லைன், ஆப்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அலிபாபா நிறுவன வழியை பிளிப்கார்ட் நிறுவனமும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.