கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் உலகம் முழுவதிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் பலர் கொரோனா தடுப்பூசி போடுவதில் நாட்டம் இன்றி உள்ளதால் பிலிபைஸ் பிரதமர் எரிச்சலடைந்துள்ளார்.
ஏற்கனவே பிலிப்பைன்ஸில் இதுவரை 13,64,239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,749 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 110 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு 7 கோடி பேருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இலக்கு வகுத்துள்ளது. இந்நிலையில், அங்கு தற்போது 21 லட்சம் பேர் மட்டுமே 2 டேஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ அவர்கள் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தொற்றுநோய் நாட்டுக்கு பேரழிவை தரும் எனவும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவதுடன் தடுப்பூசி போடாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடுங்கள். நீங்கள் இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே நாடு மருத்துவந்தருக்கடியில் இருப்பதுடன் அரசின் ஆலோசனை பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டும் விதமாக இருப்பதாகவும், இனி கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…