85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ சரக்கு விமானம் விழுந்து விபத்து…!

Default Image

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி-130 எனும் இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்துள்ளது.

பிலிப்பைன்சில் உள்ள விமானப் படைக்குச் சொந்தமான c-130 எனும் ராணுவ சரக்கு விமானம் சுலுவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 85 பேருடன் கிளம்பிய இந்த விமானம் காலை 11.30 மணியளவில் இந்த ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரை இறங்கிய பொழுது விபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்த விமானத்தில் இருந்த 85 பேரில் இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், விமானம் எப்படி தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து முறையான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் விமானம் தரையிறங்கும் போது விழுந்து உடனடியாக தீ பற்றியதால் இந்த விபத்தில் பலர் இறந்து இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா அவர்கள் மீட்புப் படை வீரர்கள் விமானப்படை தளத்தில் களமிறங்கியுள்ளதாகவும், இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களை காப்பாற்ற முடியும் என தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்