அனைவருக்கும் இலவச தடுப்பூசி – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.அங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபைசர் தடுப்பூசியை நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் அரசாங்கம் ஏற்கனவே அனுப்பத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.