இந்தியாவில் அவசரகால அனுமதி கோரி ஃபைசர் நிறுவனம் விண்ணப்பம்..!

அமெரிக்க மருந்தக நிறுவனமான ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்துள்ளது.
“ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி டிசம்பர் 4 ஆம் தேதி டி.சி.ஜி.ஐ.க்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. ஃபைசர் நிறுவனம் உருவாகியுள்ள தடுப்பூசி கடந்த 2 ஆம் தேதி இங்கிலாந்தும், அதைத் தொடர்ந்து 4 ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவிற்கான தடுப்பூசிகள் உருவாக்கும் பணிகளில் பல நாடுகள் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் பல இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளது. இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.