மத்திய நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம்…!!
மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு சாதாரணமான சிகிச்சைதான் என்று பாஜகவினர் கூறிவந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு அருண் ஜெட்லி வசமிருந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இலக்காக்கள் இல்லாத அமைச்சராக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் முழு சிகிச்சை பெற்று குணமைடைய 3 மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அருண்ஜெட்லி சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது 3 மதக்களத்திற்கு அவரின் இலக்காக்கள் மாற்றியமைக்கப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.