காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்!
லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார்.
அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளரிடம் இதை பற்றி விசாரிக்கையில் தாம் தனது காரில் வேலைக்காக கையுறை பெட்டியை வைத்திருந்ததாகவும், நடைபயிற்சி செய்ய காரில் நாயுடன் சென்ற போது அதை ராம்போ சாப்பிட்டிருக்க கூடும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ராம்போ வயிற்றிலிருந்து 29 கையுறைகளை அகற்றியுள்ளார். மேலும் 12 மணி நேர மருத்துவ சிகிச்சைக்கு பின் வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…