ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய ஆறு தேவாரப் பாடல்களை வெளியிட்ட பேரூர் ஆதினம் .!

- உலகுக்கு தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஆறு தேவாரப் பாடல்களை பாடினார்கள்.
- பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பாடலை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
உலகுக்கு தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஆறு தேவாரப் பாடல்கள் பாடினார். இந்நிலையில் பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய ஆறு பாடல்களும் இன்று வெளியிட்டப்பட்டது.
இந்த பாடல்களை பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில் , “திருமுறைகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானின் பல்வேறு திருகோயில்களில் அருள செய்யப்பெட்டவை என்ற பெருமைக்குரியவை. அத்தகைய திருமுறைகள் என்றென்றும் கயிலையில் ஒலித்துகொண்டிருக்கிறது என்று நம்புவது நம்முடைய மரபு.
நம் முன்னோர்களும், பேரூர் புராணத்திலும் தென் கயிலாயம் என்று போற்றப்படுவது நம்முடைய வெள்ளயங்கிரி மலை. கயிலாயத்திற்க்கு போக முடியாதவர்கள் தென் கயிலாயத்திற்கு போனாலும் கயிலாயத்திற்க்கு சென்ற பயனை பெறலாம். அத்தகைய தென் கயிலாய மலையின் அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் பல வகையான சமயப் பணிகள், சமூக பணிகளை செய்து வருகிறது.
அதில் ஓர் உன்னத பணியாக தேவாரப்பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழுக்காக ஏராளமான பணிகள் செய்து வரும் இந்த பேரூர் ஆதினத்தில் தேவாரப்பாடல்களை வெளியிடுவது பெருமைக்குரியது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் இந்தப் பணியை எடுத்துள்ளது தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் ஆற்றிக் கொண்டிருக்கும் தொண்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என கூறினார்.
மேலும் தமிழ் கலாசாரம் என்பது அடிப்படையில் ஒரு பக்தி கலாசாரம். பக்தியையே ஒரு மூலமாக வைத்து வளர்ந்த கலாசாரம். பக்தி என்றால் அது கடவுள் பற்றி அல்ல. நீங்கள் ஏதோ ஒரு தன்மையை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டுமென்றால் அதற்கு பக்தி தேவை.
விளையாட்டு, இசை, கலை, தொழில் என இவற்றில் எதுவாக இருந்தாலும் அதை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல பக்தி தேவை. பக்தி என்றால் எல்லையில்லா ஈடுபாடு யார் முழு பக்தியுடன் ஒரு செயலை செய்கிறார்களோ அந்த செயல் சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள். தமிழ் கலாச்சாரத்தில் பரவசத்திலேயே வாழ்ந்த பல பக்தர்கள் இருக்கிறார்கள்.
பக்தியிலேயே வளர்ந்து வந்த நம் சம்ஸ்கிரிதி குழந்தைகளின் இனிப்பான குரலில் தேவாரத்தை நீங்கள் கேட்டு ரசிக்க வேண்டும். பரவச நிலைக்கு செல்ல வேண்டும் என கூறினார்.சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய ஆறு தேவாரப் பாடல்களும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யு-யூடிப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.