செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்…! புகைப்படத்தை வெளியிட்ட நாசா…!
பெர்சவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி என்ற பெர்சவரன்ஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலுள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை நெருங்கியதை அடுத்து, விஞ்ஞானிகள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். தற்போது பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தையும் நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Hello, world. My first look at my forever home. #CountdownToMars pic.twitter.com/dkM9jE9I6X
— NASA’s Perseverance Mars Rover (@NASAPersevere) February 18, 2021