செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த ரோவர்- நாசா சாதனை…!
செவ்வாய் கிரகத்திற்கு நாசா அணுப்பிய பெர்சிவரென்ஸ் ரோவர்,செவ்வாயின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை தூய்மையான, சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.இதன்மூலம் நாசா மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.செவ்வாயில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரானது தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
இந்த நிலையில்,ரோவரானது தற்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி வருகிறது.இந்தப் பணிக்காகவே ரோவருடன் MOXIE என்ற ஒரு கருவியை இணைத்து அனுப்பியுள்ளனர்.
காரின் பேட்டரி அளவுள்ள இந்த கருவி ரோவரின் முன்பகுதியில் அமைந்துள்ளது.மேலும்,இந்த MOXIE கருவியானது,கார்பன் டை ஆக்சைடின் மூலக்கூறுகளைப் பிரித்து ஆக்சிஜனாக மாற்றும் திறன் கொண்டுள்ளது.முதல்கட்ட சோதனையின் போது 5 கிராம் ஆக்சிஜன் அளவை இது உற்பத்தி செய்துள்ளது.இந்த 5 கிராம் ஆக்சிஜன் மூலம் ஒரு வெண்வெளி வீரர் 10 நிமிடத்திற்கு சுவாசிக்க முடியும். MOXIE கருவியானது 1 மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் அளவை உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கி அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனானது விண்வெளி வீரர்கள் சுவாசிக்க மட்டும் அல்லாமல் ரோவர் பூமிக்கு திரும்ப உதவதற்கு உந்து சக்தியாகவும் பயன்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் முதன் முதலில் ஹெலிகாப்டரை இயக்கி சாதனைப் புரிந்த நாசா தற்போது மற்றொரு சாதனையையும் எட்டியுள்ளது. இதனால்,செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நீண்ட கால கனவுத்திட்டம் தற்போது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது என்றே கூறலாம்.