வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சில இடங்களில் கொண்டாட்டத்துக்கு தடை விதித்து இருந்தாலும், தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மொத்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வருடம் தோறும் நடத்தக்கூடிய புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சமூக இடைவெளியுடன் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாகவும், கடற்கரை சாலையில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் புத்தாண்டு கொண்டாடலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…