லெனின் சிலையை அடுத்து பெரியார் சிலையா.? எச்.ராஜாவிற்கு வைகோ பதிலடி
திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின.பாஜக கூட்டணி மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சியினரும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர்.
இதனிடையே மாலை முதல் திடீரென பாஜக கூட்டணி அபார முன்னிலை பெறத்தொடங்கியது. இரவு 8.30 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 31 தொகுதிகளைவிட அதிகமாக, பாஜக கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது.. எனவே, பாஜக கூட்டணி திரிபுராவில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் பிஜேபி மற்றும் ஐபிஎப்டி கட்சியினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அதனை அடுத்து தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாஜகவினர், பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த லெனின் சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் கோஷமிட்டனர்.
லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து கால்பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால்பந்தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரிவித்துள்ளார்.
தற்போது திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எச்.ராஜாவின் பேச்சுக்கு , மதிமுக தலைவர் வைகோ அவர்கள் பெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கைகள் துண்டு துண்டுடாகும்,களவாணிகள் போல இரவில் வராமல் பகலில் நேரம் குறித்து வாருங்கள் என்று கூறினார்.
வைகோ அவர்கள் அளித்த பேட்டியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதற்கு மிகவும் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.