குடமுழுக்கு காணும் பெரியகோவில் என்னென்ன யாகசாலை பூஜைகள்!?

Default Image
  • 23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரிய கோவில்
  • இன்று கும்பாபிஷேகம் காண உள்ள நிலையில் தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள்

இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று  காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.

பெரியகோவிலில் இவ்விழாவானது ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கிய நிலையில்  தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதன்பின் பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும் அதே நாள் மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்று வந்தன.பெரியகோவிலே மந்திர ஒலிகள் எங்கும் எதிரொலித்தன.இந்த பூஜைகளத் தொடர்ந்து இன்று  அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜையான ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி ஆகியவை நடைபெறும்

அதன் பின்னா் சரியாக காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி நடைபெற்று  7.25 மணிக்கு எல்லாம் திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கும்.இதைத்தொடா்ந்து கச்சிதமாக காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு  குடமுழுக்கு நடைபெறுகிறது.10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்று, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதே போல் மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும் இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளிகிறார்.குடமுழுக்கு பற்றி கேட்பதே புண்ணியம் என்றால் அதில் கலந்து கொள்வதும் அதனை காண்பதும் அதை விட புண்ணியம்.23 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு காண்கிறது தஞ்சை அதில் பங்குகொண்டு இறை தரிசனம் பெறுவது எத்தனை புண்ணியம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….எல்லாம் அவன் அருள் அவனை வணங்கி வளம் பெறுவோம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்