ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு – ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி!
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தால் திரைப்படங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறியுள்ளார்.
மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா திரையுலகினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பல நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தற்பொழுது ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா படி ஒரு முறை படம் தணிக்கை செய்யப்பட்ட பின்பு மீண்டும் தணிக்கை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதால் இந்த அதிகாரம் மத்திய அரசுக்கோ அல்லது மத்திய அரசை சார்ந்த குழுவுக்கோ கொடுக்கப்பட்டு விட்டால் நிச்சயம் திரைப்படங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அரசுக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் அனைவரையும் திரையுலகினரால் சமாளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.