பெருவின் ஜனாதிபதி மாறியதற்கு எதிராக மக்கள் போராட்டம்.! 7 பேர் பலி அவசரநிலை அமல்.!
பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதியாக இருந்த டினா போலுவார்டே புதிய ஜனாதிபதியாக இம்மாதம் பொறுப்பேற்றார். ஜனாதிபதி மாற்றப்பட்டதற்கும், பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் பல்வேறு இடஙக்ளில் கலவரமாக மாறி வருகிறது. இதுவரை இந்த போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த புதிய அரசு அவசர நிலையை அறிவித்து ராணுவத்தினரை களமிறக்கி போராட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
சகோதரிகளே மற்றும் சகோதரர்களே சற்று அமைதியாக இருங்கள். இது தான் நான் உங்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே விஷயம். 1980,90களில் நாம் ஏற்கனவே இந்த சூழ்நிலையை சந்தித்து இருக்கிறோம். மேலும் அந்த வேதனையான வரலாற்றிற்கு திரும்ப நாம் விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன். அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என புதிய ஜனாதிபதி டினா போலுவார்டே தெரிவித்தார்.