கனட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!
கனட பிரதமர் மேன்கைன்ட் (mankind) என்ற வார்த்தையை தவிர்க்குமாறு கூறியதால் பாராட்டுகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. அரசியல் மற்றும் நீதித்துறையில் அதிகளவு பெண்களை ஈடுபடுத்துவதே தமது நோக்கம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடிவ் ( justin trudeau ) ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், எட்மான்டன் (edmonton) நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களுடன் உரையாடிய போது, பெண் ஒருவர் mankind என்ற வார்த்தையை பயன்படுத்தி கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்ட கனடா பிரதமர், மேன் என்பது ஆணை மையப்படுத்தி குறிக்கும் விதமாக இருப்பதால், மேன்கைண்ட் என்ற வார்த்தைக்கு பதிலாக, பீபில்கைண்ட் (peoplekind) என்ற பொதுவான வார்த்தையை பயன்படுத்தலாம் என்றார்.
அவரின் இந்த கருத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், அரசியல் ஆதாயத்திற்காக பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.