மக்கள் என்னை மீண்டும் அதிபராக்குவார்கள் – அதிபர் டிரம்ப் நம்பிக்கை

மக்கள் என்னை மீண்டும் அதிபராக்குவார்கள்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கிடையில் அங்கு தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பு பணியில் அரசு மிகச்சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மக்களை பீதியில் வைத்திருக்க விரும்பவில்லை என்றும், நோய்த்தொற்றை தடுக்க நம்பமுடியாத வேலைகளை அரசு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றை குறைக்க நம்ப முடியாதவகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால் தன்னை மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.