புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு உதவிய மக்கள் செல்வன்.!

Default Image

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி விஜய் சேதுபதி உதவியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தவசி. இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார் . புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் உதவ கோரி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவி வருகின்றனர். ஏற்கனவே சூரி மற்றும் சிவகார்த்திகேயன் நிதியுதவி வழங்கி உதவிய நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாயை வழங்கி உதவியுள்ளார் . அந்த தொகையை நடிகரும் ,சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா மதுரையில் தவசியை நேரில் சந்தித்து வழங்கியதுடன்,அவர் சார்பாக ரூ.10,000 நிதியுதவியையும் வழங்கி உதவியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்