மக்கள் விரும்பும் நடிகர் மக்கள் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் விவேக் 800 படம் தொடர்பான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 800 எனும் தலைப்பில் தமிழில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகிய மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நடிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கண்டுள்ளது. ஏனென்றால் முத்தையா முரளிதரன் தமிழ் இனப்படுகொலைக்கு ஆதரவு தந்தவர் எனவும், அவர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதாலும் பலருக்கும் அவர் மீது ஒரு வெறுப்பு உள்ளது.
எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விவேக் தற்பொழுது இந்த படம் குறித்து கருது கூறியுள்ளார். அதில், 800 திரைப்பட விவகாரத்தில் மக்களால் விரும்பப்பட கூடிய நடிகர் மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…