இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம்.
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்.
தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிதோடு, 1977 ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சத்துணவுத் திட்டம், பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவியது என்று இவரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறந்த திட்டங்களையும் நிறைவேற்றியதால், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முதலமைச்சர் பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…