ஆளுநரை வீதியில் புரட்டி எடுத்த பொதுமக்கள்..!

Default Image

கிரீஸ் நாட்டின் 2-வது மிக பெரிய நகரமான தசலோனிகி நகரத்தின் ஆளுநராக யின்னிஸ் போட்டரிஸ் (73) இருந்து வருகிறார். இந்நிலையில் யின்னிஸ் போட்டரிஸ் மீது அந்நகர பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

யின்னிஸ் போட்டரிஸ், ஒரு தேசியவாத எதிர்ப்பு கருத்து உள்ளவர் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு நினைவு செலுத்தும் விழாவிற்கு யின்னிஸ் போட்டரிஸ் கலந்துகொள்ள வந்திருந்தார்.

ஆளுநருக்கு அடி, உதை: வீதியில் புரட்டி எடுத்த பொதுமக்கள்அவர் அங்கு வந்ததை அறிந்த பொதுமக்கள், கூட்டமாக அங்கு வந்து ஆளுநர் யின்னிஸ் போட்டரிஸை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின் போலீசாரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆளுநர், ”இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. பொதுமக்கள் தாக்கியதில் நான் நிலை குலைந்து போனேன், என் உடல் முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது”. என தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் மீதான இந்த தாக்குதலுக்கு, கிரேக்க பிரதமர் அலெக்சிஸ், இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த தாக்குதலுக்கான விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்