ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறி மட்டுமே இருக்கும் – ஏஞ்சலிக்
ஓமைக்ரனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்சோர்வு, தலைவலி மட்டுமே உள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்போது புதிய வகை ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுகுறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் இந்த வகை வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தற்போதைய சூழலில் ஓமைக்ரானால் பாதிப்பு குறைவாக இருப்பினும், இதன் வீரியம் குறித்து வரும் காலங்களில் தான் தெரிய வரும். ஓமைக்ரனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்சோர்வு, தலைவலி மட்டுமே உள்ளதாகவும், சுவையிழப்பு, வாசனையின்மை, காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓமைக்ரான் குறித்து வேண்டாம் என்றும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறிய அளவிலான அறிகுறி மட்டுமே தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.