இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.?

நடிகர் விஜய்சேதிபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
இந்த படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் அணைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மிஸ்கின் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு அக்சன் த்ரில்லர் கதையை மையமாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025